இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் கைது!

பிரிஸ்டோல் பகுதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் கைதுசெய்யப்பட்டார். 


வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டோல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தப் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. வெற்றிக்குப் பின்னர் அந்தப் பகுதியில் இருந்த இரவு விடுதிக்கு இங்கிலாந்து வீரர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. 

அப்போது அங்கிருந்த ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதில் அவரை பென்ஸ்டோக்ஸ் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தை அடுத்து கைதுசெய்யப்பட்ட ஸ்டோக்ஸ், பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தின்போது சக வீரரான அலெக்ஸ் ஹேல்ஸும் அவருடன் இருந்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக லண்டனில் நாளை நடைபெறும் 3-வது ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!