இன்று 4-வது ஒருநாள் போட்டி! #IndvsAus

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி, பெங்களூரில் இன்று  நடைபெற உள்ளது. முதலில் மோதிய மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று,  5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-௦ என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று அனைத்திலும் பலமாக உள்ள இந்திய அணியைச் சமாளிக்க, ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. ஐந்து போட்டிகள்கொண்ட இத்தொடரில், மூன்று போட்டிகளில் வென்றதன்மூலம் தொடரில் வெற்றியை உறுதிசெய்த இந்திய அணி, இன்று எவ்வித பதற்றமும் இன்றியே ஆடும். முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததால், கடைசி இரண்டு போட்டிகளில் ஆறுதல் வெற்றிபெறும் நோக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய உத்வேகத்துடன் களமிறங்கும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில், கேப்டன் பொறுப்பிலிருந்து தொடர்ந்து 10 வெற்றிகளைப் பதிவுசெய்த சாதனையை கேப்டன் விராட் கோலி படைப்பார். மேலும், இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளில் தொடர் வெற்றியைப் பதிவுசெய்த அணி என்ற சாதனையைப் படைக்கும்.

மழை காரணமாக நேற்றைய பயிற்சியை இந்திய அணி ரத்துசெய்தது. பெங்களூரின் சின்னசாமி மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் 4-வது ஒரு நாள் போட்டி தொடங்குகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!