#IndvsAus: இந்திய அணிக்கு 335 ரன்கள் இலக்கு...#liveupdate

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதம் விளாசியுள்ளார். 

வார்னர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஐந்து போட்டிகள்கொண்ட இத்தொடரில், மூன்று போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரில் வெற்றியை உறுதிசெய்த இந்திய அணி, இன்று எவ்வித பதற்றமும் இன்றியே விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததால், கடைசி இரண்டு போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.

இன்றைய போட்டிக்கான டாஸை வென்று பேட்டிங் ஆட தீர்மானித்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக வார்னர் இந்திய அணியின் பௌலர்களில் பந்துகளை மைதானத்தின் நாலா புறமும் சிதறடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர், சதம் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஃபின்ச்சும் சதத்தை நெருக்கிக் கொண்டிருக்கிறார். வார்னர் 124 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபின்ச் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது. ஸ்டோய்னஸ் 15 ரன்களுடனும், மேத்யூ வேட் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!