வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (28/09/2017)

கடைசி தொடர்பு:17:47 (28/09/2017)

#IndVsAus: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 335!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 334 ரன்கள் குவித்துள்ளது.

களத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஐந்து போட்டிகள்கொண்ட இத்தொடரில், மூன்று போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரில் வெற்றியை உறுதிசெய்த இந்திய அணி, இன்று எவ்வித பதற்றமும் இன்றியே விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததால், கடைசி இரண்டு போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.

இன்றைய போட்டிக்கான டாஸை வென்று பேட்டிங் ஆட தீர்மானித்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக டேவிட் வார்னர் சதம் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் ஃபின்ச், 94 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் குவித்துள்ளது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.