இந்திய அணி தோல்வி குறித்து கோலி விளக்கம்

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியினால் முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

kohli

இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு கேப்டன் கோலி செய்தியாளர்களைச் சந்தித்த போது தோல்வி குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர், “முதல் 30 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி மிக பலமான இடத்தில் இருந்தது. அந்த நிலையில் அவர்களை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என நினைத்தோம். அதைச் சிறப்பாக செய்து முடித்தோம். எங்கள் அணிக்கும் நல்ல தொடக்கம் கிடைத்தது. எனினும், அதன் பிறகு பெரிய பார்ட்னர்ஷிப் அமையாததால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 
ஆஸ்திரேலிய அணியும் சிறப்பாகப் பந்து வீசியது. பாண்டியா மற்றும் கேதர் ஜாதவ் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போதும், அவர்களது சிறப்பான பந்துவீச்சால் கட்டுப்படுத்தினர்.

ஏற்கெனவே தொடரை வென்று விட்டதால்,அணியில் இருக்கும் மற்ற வீரர்களைப் பயன்படுத்துவது என்பதுதான் சரியாக இருக்கும். அதன் படி களமிறங்கிய சமி மற்றும் உமேஷ் யாதவ் சிறப்பாகப் பந்து வீசினார்கள். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாளாக அமைந்து விடாது. நேற்றும் அது போல் ஒரு நாளாக அமைந்துவிட்டது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!