வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (29/09/2017)

கடைசி தொடர்பு:17:07 (29/09/2017)

கவாஸ்கரின் புகழாரம்... நெகிழ்ந்த விராட் கோலி!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியினால் முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 'விராட் கோலி அணியை நன்றாக வழி நடத்தி வருகிறார். அவர் இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்ற பெருமையைப் பெறுவார்' என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

கவாஸ்கர் மற்றும் விராட் கோலி

இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி, 'கவாஸ்கர் இதைப் போன்று என்னைப் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராவதற்கு இன்னும் நான் மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்' என்று பணிவாகத் தெரிவித்துள்ளார். 

தற்போது ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே நடந்து வரும் ஒருநாள் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி வரும் 1-ம் தேதி நடக்கவிருக்கிறது.