நாக்பூரில் இன்று 5-வது ஒரு நாள் போட்டி! #IndvsAus

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று  நடைபெற உள்ளது. முதலில் மோதிய நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தும்  5 போட்டிகள் கொண்ட தொடரில்  3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என்று அனைத்திலும் பலமாக உள்ள இந்திய அணியை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பதிவு செய்தது. இதன் மூலம் இந்த ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இன்று இத்தொடரின் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது.  இப்போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேச தரவரிசையில் மீண்டும் முன்னேறியே இருக்க இந்திய அணியும், போட்டியை வென்று இத்தொடரில் ஆறுதல் வெற்றியைத் தேட ஆஸ்திரேலிய அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இப்போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என்று தெரிகிறது. 

கடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது. 4-வது போட்டியில் களமிறக்கப்பட்ட அதே அணி தான் இன்று நாக்பூரில் நடக்கும் இறுதிப்போட்டியிலும் களம் காண உள்ளது. இந்திய நேரப்படி பகல் 1.30 மணி அளவில் போட்டி தொடங்கவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!