ரோஹித் ஆட்டநாயகன், பாண்டியா தொடர் நாயகன்; இந்தியா மீண்டும் முதல் இடம்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் இன்று நடந்தது. 

ind vs aus

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மற்றும் ஃபின்ச் சிறப்பான தொடக்கம் அளித்தனர். சிறப்பாக ஆடிய வார்னர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி இந்திய சுழற்பந்துவீச்சில் சிக்கி, அடுத்தடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தது. நடுவரிசையில் களமிறங்கிய ஹெட் மற்றும் ஸ்டோனிஸ் உதவியுடன் அந்த அணி 50 ஓவர்களில் 242 ரன்கள் எடுத்தது. 

243   ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 42.5 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 125 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றியது. 

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் ஷர்மா தேர்வு செய்யபட்டார். தொடர் முழுவதும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா தொடர் நாயகனாக தேர்வானார்.  இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்தது.

 வாழ்த்துக்கள் கோலி அண்ட் கோ..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!