Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்திரேலிய தொடர் குறித்து என்ன சொல்கிறார் ஆட்ட நாயகன் ரோஹித் ஷர்மா..?

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பறிய்யுள்ளது. ஆட்டம் முடிந்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து, தொடர் குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார் ஆட்ட நாயகன் மற்றும் அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா.

ரோஹித் ஷர்மா

செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மா கூறியதாவது, 'இந்த அணிக்கு மிக அதிக திறமை இருக்கிறது. இதற்கு மிக பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் பௌலர்கள் பந்துவீசிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதுவும் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 250 ரன்களுக்குள் சுருக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. கடைசி இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேய அணி, அவர்கள் பேட்டிங் செய்யும் போது மிகவும் அதிரடியாக ஆடத் தொடங்கி வேகமாக ரன்களை ஸ்கோர் செய்தனர். ஆனால், நம் பௌலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து அவர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். இது இந்திய அணியின் பௌலிங் மிகச் சிறப்பாக இருப்பதையே காட்டுகிறது. இந்த தொடரில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் சிறப்பாகவே விளையாடினர். இது அணியில் இருக்கும் பென்ச் வலிமையை பறைசாற்றுகிறது' என்று நம்பிக்கையாக பேசினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement