வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (02/10/2017)

கடைசி தொடர்பு:06:30 (02/10/2017)

டாப் 4 சிறப்பாக செயல்படவில்லை: ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பறிய்யுள்ளது. ஐந்தாவது ஒரு நாள் போட்டி முடிவடைந்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

ஸ்டீவ் ஸ்மித்

செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்மித் கூறியதாவது, 'இந்த தொடர் முழுவதும் நாங்கள் சில இடங்களில் நன்றாக விளையாடினோம். ஆனால், மொத்த தொடராக பார்க்கும் போது, நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது தெரியும். பேட்டிங்கை பொறுத்தவரை, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது சரியில்லை. பேட்டிங் வரிசையில் முதலில் களமிறங்கும் நால்வர்தான் நன்றாக விளையாடி ஆட்டத்துக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டுபம். அதை இந்த தொடரில் சரியாகச்  செய்யவில்லை. அப்படிச் செய்தால்தான் கடைசி ஓவர்களில் அதிக ரன்களை விரைவாக ஸ்கோர் செய்ய முடியும். என்னளவில் இந்த தொடரில் மிகவும் சோபிக்கவில்லை. ஆனால், 20 ஓவர் தொடர் அடுத்து வர உள்ளது. அதில் நானும் எங்கள் அணியும் நன்றாக விளையாடுவோம்' என்று தெரிவித்துள்ளார்.