உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆனார் விராட் கோலி

ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலில் விராட் கோலி தனது நம்பர் 1 இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

கோலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தத் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறார். சமீபத்தில் நிறைவடைந்த இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பெற்ற மிகப்பெரும் வெற்றியின் மூலம் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்களின் தரவரிசை உயர்ந்துள்ளது.

மேலும், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து 5-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார் ரோகித் சர்மா. இதன்மூலம் டாப்-10 பட்டியலில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய முன்னாள் கேப்டன் தோனி 12-ம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பும்ரா 5-ம் இடத்திலும் அக்சர் படேல் 7-ம் இடத்திலும் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!