வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (04/10/2017)

கடைசி தொடர்பு:10:40 (04/10/2017)

டெஸ்ட் தர வரிசையில் கோலிக்கு ஆறாவது இடம்!

டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆறாம் இடம் பிடித்துள்ளார்.

கோலி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசைப் பட்டியலை சமீபத்தில் ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில், 806 புள்ளிகளுடன் விராட் கோலி ஆறாம் இடத்தில் உள்ளார். இந்தத் தர வரிசையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 936 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 889 புள்ளிகள் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில், முதல் 10 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 9-ம் இடத்தில் லோகேஷ் ராகுலும், 10-ம் இடத்தில் ரஹானேவும் உள்ளனர்.

இதேபோல, பந்துவீச்சாளர்களுக்கான தர வரிசையில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 884 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அஸ்வின் 852 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். முதலிடத்தில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் உள்ளார்.

மேலும், சமீபத்தில் ஐ.சி.சி வெளியிட்ட ஒரு நாள் தர வரிசைப் பட்டியலில், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.