இந்திய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விலகல்!

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விலகியுள்ளார். 


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியிடம் இழந்தது. இதனால் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி டி20 தொடரில் களமிறங்குகிறது. இந்தநிலையில், தோள்பட்டை காயத்தால் கேப்டன் ஸ்மித் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்மித்துக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை டேவிட் வார்னர் கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மித் இல்லாதது, ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டி20 போட்டி தோனியின் சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இவ்விரு அணிகள் இதுவரை மோதிய 12 டி20 போட்டிகளில் இந்திய அணி 9 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!