வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (08/10/2017)

கடைசி தொடர்பு:07:53 (09/10/2017)

தோனி மகளுடன் விளையாடும் கோலி..! வைரலாகும் வீடியோ

தோனியின் மகள் ஷிவாவுடன் விளையாடும் வீடியோவை விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியுக்கு எதிரான முதல் டிவெண்டி-20 போட்டி நேற்று தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. அந்தப் போட்டியின் இடையே மழை பெய்ததன் காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறையில் ஸ்கோர் குறைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின்னர், கோலி தோனியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, தோனியின் மகள் ஷிவாயுடன் விளையாடியுள்ளார். அந்த வீடியோவை தற்போது கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,'மறுபடியும் ஷிவாயுடன் இணைந்துள்ளேன். குழந்தைத்தன்மைக்கு மத்தியில் இருப்பது எவ்வளவு பெரிய வரம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.