தொடரை வெல்லுமா இந்தியா? இன்று இரண்டாவது டி20 போட்டி !

india vs

இந்தியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது டி20 போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் முதல் போட்டி அக்டோபர் 7-ம் தேதி ராஞ்சியில் நடந்தது. ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி டி20 ஓவர் போட்டியின் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆடியது. ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சு அதன் முயற்சியைக் கட்டுப்படுத்திவிட்டது. 18.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதனால், டக்வொர்த் லீவிஸ் விதியின்படி இந்திய அணிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள்  இலக்காக வைக்கப்பட்டது. ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அந்த ரன்களை எடுத்தது இந்திய அணி. இதன்மூலம் அதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. 1-0 எனும் கணக்கில் முன்னிலையும் பெற்றது. 

இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி, இன்று கௌகாத்தியில் நடைபெறவிருக்கிறது. இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில், தொடரை வெல்ல இந்தியாவும், முதல் வெற்றியைப் பெற ஆஸ்திரேலியாவும் முயற்சி செய்யும் என்பதால், நிச்சயம் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!