ஐந்தாண்டு சாதனையைத் தக்கவைக்குமா இந்தியா?: இரண்டாவது டி20 போட்டியில் ஆஸி., பந்துவீச்சு

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டேவிட் வார்னர், பீல்டிங் தேர்வு செய்தார். 


ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி, ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியிலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்ய இன்றைய போட்டியில் இந்திய அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

கவுகாத்தி ஏ.சி.ஏ. பரஸ்பாரா மைதானத்தில் நடக்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். காலை முதல் மழை பெய்திருந்தாலும், போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் குறைவே என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியுடன் இதுவரை 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, அவற்றில் 10 போட்டிகளை வென்றுள்ளது. அதேபோல், கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதிக்குப் பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி தோற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!