வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (10/10/2017)

கடைசி தொடர்பு:21:17 (10/10/2017)

#IndVsAus: இந்திய டாப் ஆர்டர் சொதப்பல்... ஆஸ்திரேலியா பந்துவீச்சில் கலக்கல்!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி, ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியிலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்ய இன்றைய போட்டியில் இந்திய அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது. இதையடுத்து, இன்றைய போட்டிக்கான டாஸை வென்று பந்துவீச தீர்மானித்தார் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர். பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அவர்கள் 100 ரன்களைத் தாண்டுவார்களா என்றே ஒரு கட்டத்தில் சந்தேகம் எழுந்தது. ஜாதவ் மற்றும் பாண்டியா முறையே 27 மற்றும் 25 ரன்கள் அடித்து, அணி 118 ரன்கள் எடுக்க வித்திட்டனர். ஆஸ்திரேலியா சார்பில், Jason Behrendorff 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப்போது பேட்டிங்கை தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, 1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.