ஓய்வு பெறுகிறார் 'கம்-பேக்' மன்னன் நெஹ்ரா!

தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வரும் நவம்பர் 1-ம் தேதியுடன் முடித்துக் கொள்கிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா. 

Ashish Nehra


வரும் நவம்பர் 1-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பை-பை சொல்கிறார் நெஹ்ரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1999-ம் ஆண்டு அறிமுகமான நெஹ்ரா, தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பல காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதனால், அவருக்கு இந்த காலகட்டத்தில் 12 சர்ஜரிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இருந்தும் அவர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியில் ஒருவராக இருந்தார். 2003-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நெஹ்ரா, 23 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதுதான் உலகக் கோப்பைகளில் இன்றளவும் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் பெஸ்ட் பௌலிங் ஃபிகராக இருந்து வருகிறது. இப்படி பல சாதனைகளைப் புரிந்த நெஹ்ரா, அவரது சொந்த ஊரான டெல்லியில் நடக்கும் போட்டியுடன் கிரிக்கெட்டுக்கு விடை கொடுக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!