வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (12/10/2017)

கடைசி தொடர்பு:17:33 (12/10/2017)

மகளிர் கிரிக்கெட் போட்டிகளை அதிகமாக ஒளிபரப்பவேண்டும்! மித்தாலி ராஜ் கோரிக்கை

மகளிர் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகள் அதிகமாக ஒளிபரப்பவேண்டும் என்று மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.


மகளிர் கிரிக்கெட் குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், 'பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் விளையாட்டில் சேர்ந்து சாதிக்க நாங்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்திவருகிறோம். மகளிர் கிரிக்கெட்டுக்கு தொலைக்காட்சிகள் அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். தொலைக்காட்சிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை அதிகமாக ஒளிபரப்பவேண்டும். அதன்மூலம் மக்களிடையே ஆர்வம் ஏற்படும். நேரடி ஒளிபரப்பை பார்த்த மக்களைவிட அதிகமானோர் மறு ஒளிபரப்பைப் பார்த்துள்ளனர். பெண்களாகிய நாங்கள் அதிகப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம். அது டி-20 போட்டியாக இருந்தாலும், ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி. உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு எங்கள் அணி தயாராக உள்ளது. போட்டிகள் குறித்த விழிப்புஉணர்வு மற்றும் விளம்பரத்தை அதிகப்படுத்த வேண்டும். மக்கள், போட்டிகளை மைதானத்துக்கு வந்து பார்க்க வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை' என்று தெரிவித்தார்.