தெற்கு ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி: சொல்லி அடித்த கோவை பசங்க!

தெற்கு ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில், கோவையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

கோவை

தெற்கு ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்றது. தெற்கு ஆசியா முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தியாவில் இருந்தும் 50-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் கோவையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். கோவையைச் சேர்ந்த சரண்ராஜ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய இருவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

கோவை

இதில் சரண்ராஜ் பொறியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். கிருஷ்ணகுமார் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சரண்ராஜ் சீனியர் பிரிவிலும் கிருஷ்ணகுமார் ஜூனியர் பிரிவிலும் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளின்கீழ் நடைபெற்ற போட்டிகளில், சரண்ராஜ் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும், கிருஷ்ணகுமார் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இதுகுறித்து இவர்களின் பயிற்சியாளர் செல்வகுமார் கூறுகையில், "இந்த வெற்றியின் மூலம் இருவரும் ஆசியப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தங்கம் வெல்வோம்" என்றார் நம்பிக்கையோடு. சரண்ராஜின் தந்தைதான்
செல்வகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நேற்று கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆனால், தமிழக அரசு இவர்களுக்கு நேரடியாக எந்த உதவியையும் செய்யவில்லை. கோவை போலீஸ் டிப்பார்ட்மென்ட்தான், இவர்கள் பயிற்சி எடுப்பதற்கு இடம் தந்து உதவியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!