இந்தியா - ஆஸி., இடையிலான மூன்றாவது டி20 போட்டி கைவிடப்பட்டது! #IndVsAus

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 போட்டி, மைதானம் மிகவும் ஈரமாக இருந்த காரணத்தால் கைவிடப்பட்டது. இந்தப் போட்டி தொடங்க தாமதமாகும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத் மைதானம்

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் விளையாடியுள்ளது. ஒரு நாள் தொடரை இந்திய அணி, 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதுவரை நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றிருந்தன. இதையடுத்து, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே தொடரை கைப்பற்றுவர் என்ற நிலை இருந்தது. ஒருநாள் தொடரை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பாசிட்டிவாக பயணத்தை முடிக்கலாம் என்று எண்ணி இருந்தது. அதே நேரத்தில், சொந்த மண்ணில் டி20 தொடரை இழக்கக் கூடாது என்ற இந்திய அணி முனைப்பாக இருந்தது. ஆனால், 3வது போட்டி நடக்கும் மைதானம் அமைந்திருக்கும் இடமான ஹைதராபாத்தில் இன்று கன மழை பெய்ததால், ஆட்டம் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. பிறகு, மைதானம் மிகவும் ஈரமாக இருந்ததால், ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது. இதனால், டி20 தொடர் டிரா ஆனது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!