வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (14/10/2017)

கடைசி தொடர்பு:19:12 (14/10/2017)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி தேர்வு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடப் போகும் ஒருநாள் போட்டிக்கு 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

பிசிசிஐ

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேறகொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை விளையாட உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இதையொட்டி, முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்தப் பட்டியலில், விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அஜிங்கியே ரஹானே, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவ்னேஷ்வர் குமார் மற்றும் ஷர்தல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய தொடரின் போது அணியில் இருந்த கே.எல்.ராகுல், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஷிகர் தவான், தாக்கூர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.