வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (15/10/2017)

கடைசி தொடர்பு:11:57 (16/10/2017)

தொடர்ந்து 4-வது முறையாக நடாலை வீழ்த்தினார் ஃபெடரர் !

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

ஃபெடரர்
 

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரரும் மோதினர். ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்தது.  உலகின் முதல் நிலை வீரரான நடாலும் இரண்டாம் நிலை வீரரான ஃபெடரரும் மோதிக் கொண்ட போட்டி என்பதால் உலக டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாகப் போட்டி அமைந்தது. இறுதியில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தினார் ஃபெடரர்.

ஃபெடரர்
 

இந்த ஆண்டு தொடர்ந்து நான்காவது முறையாக நடாலை தோற்கடித்துள்ளார் ஃபெடரர்.  இரண்டாவது முறையாக ஷாங்காய் மாஸ்டர்ஸ் பட்டம் பெறுகிறார். அதுமட்டுமில்லை, ஃபெடரர் பெறும் 94-வது சாம்பியன் பட்டம் இது. இந்த ஆண்டு ஆஸி ஓபன், இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ், மியாமி ஓபன், ஹாலே ஓபன், விம்பிள்டன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் என ஃபெடரர் வென்ற போட்டிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க