கால்பந்துப் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த தோனி!

மும்பையில், பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் இடையிலான கால்பந்துப் போட்டியில், இரண்டு கோல்கள் அடித்து ஆட்டநாயகன் விருதுபெற்று அசத்தியிருக்கிறார், மகேந்திர சிங் தோனி. 

டோனி

நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனத்துக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தொண்டு நிறுவனத்துக்கும் பணம் திரட்டுவதற்கா,க இந்த சிறப்பு கால்பந்துப் போட்டியை நடத்திருக்கிறார்கள். இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் ஒரு அணியாகவும், கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றொரு அணியாகவும் கலந்துகொண்டு சிறப்பு கால்பந்துப் போட்டியாக விளையாடி இருக்கிறார்கள். 

டோனி

இந்தப் போட்டியில், தோனி சிறப்பாக விளையாடியும் இரண்டு கோல்கள் அடித்தும் கிரிக்கெட் நட்சத்திர அணியை வெற்றிபெற வைத்திருக்கிறார். போட்டி தொடங்கி ஐந்தாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்த டோனி, 39-வது நிமிடத்தில் ஃபிரி ஹிட் மூலம் இரண்டாவது கோலை அடித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

டோனி

போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு கோல் அடித்ததற்காக, ஆட்ட நாயகன் விருதைப் பெற்று அசத்தியிருக்கிறார் தோனி. இவர் கோல் அடித்த காணொளி, இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!