Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கும்ப்ளே இந்திய அணியின் பௌலர் மட்டும்தானா?: பி.சி.சி.ஐ-க்கு எதிராகக் கொந்தளித்த நெட்டிசன்கள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே இன்று, தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

Photo: BCCI

இதையடுத்து, சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் போனிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், அரசியல், திரையுலகப் பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கும்ப்ளேவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கும்ப்ளே, இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தவர். ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றினார். ஜம்போ என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் அனில் கும்ப்ளேவின் பயிற்சிக் காலத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக 5 டெஸ்ட் தொடர்களை வென்றதுடன், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. 

 

கும்ப்ளேவின் பிறந்தநாளுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அணியின் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட அனில் கும்ப்ளேவுக்கு பிசிசிஐ ட்விட்டர் மூலம் விடுத்த வாழ்த்துச் செய்தியில், ‘இந்திய அணியின் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிடப்பட்டிருந்தது. பிசிசிஐ-யின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு லெஜெண்டுக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள், அவர் இந்திய அணியின் பந்துவீச்சாளர் மட்டுமல்ல என பிசிசிஐக்கு எதிராக ட்விட்டரில் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதையடுத்து, அந்த ட்விட்டர் பதிவை டெலிட் செய்த பி.சி.சி.ஐ, ’இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளேவுக்கு வாழ்த்துகள் என்று புதிய பதிவை இட்டது. கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே கும்ப்ளே, பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் என்றும், ரவி சாஸ்திரியை அந்தப் பதவிக்குக் கொண்டுவரவே கோலி அவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கும்ப்ளேவுக்கு வாழ்த்துக்கூறி புதிய சர்ச்சையில் பி.சி.சி.ஐ நிர்வாகம் சிக்கியுள்ளது. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement