யுவராஜ் சிங் மீது குடும்ப வன்முறை வழக்குப் பதிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது குருகிராம் போலீஸில் குடும்ப வன்முறைப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 


அந்தப் புகாரை யுவராஜ் சிங்கின் அண்ணன் ஜோராவர் சிங்கின் மனைவியும், பிக் பாஸ் போட்டியாளருமான அகன்க்‌ஷா ஷர்மா அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், ஜோராவர் சிங் மற்றும் யுவராஜின் தாய் ஷப்னம் சிங் ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவலை அகன்க்‌ஷாவின் வழக்கறிஞர் ஸ்வாதி சிங் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்தப் புகாரில், யுவராஜ் சிங்கின் பெயர் சேர்க்கப்பட்டது ஏன் என்ற கேள்வி ஸ்வாதி சிங்கிடம் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்வாதி, ‘குடும்ப வன்முறை என்பது உடல்ரீதியான துன்புறுத்தல் மட்டுமல்ல. பணம் கேட்டும்  மனரீதியாகத் துன்புறுத்துதலும் குடும்ப வன்முறையே. யுவராஜ் சிங்கின் தாய் ஷப்னம் மற்றும் அண்ணன் ஜோராவர் ஆகியோர் அகன்க்‌ஷாவுக்கு அளித்த நெருக்கடிகள் மற்றும் துன்புறுத்தல்களைக் கண்டிக்காமல், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் யுவராஜ் சிங் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கிறார்’ என்றார். இதுதொடர்பான விசாரணை, வரும் 21-ல் நடைபெறும் என்று தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!