வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (19/10/2017)

கடைசி தொடர்பு:10:55 (19/10/2017)

'டெஸ்ட் போட்டிகளில் சாதிக்கவே விருப்பம்!' - குல்தீப் யாதவ்

ஆஷ்வின், ஜடேஜா சுழல் இரட்டையர்களுக்கு மாற்றாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து வருகிறார், 'சைனா மேன்' என்றழைக்கப்படும் குல்தீப் யாதவ். அவர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சாதித்துவந்தாலும், 'டெஸ்ட் போட்டிகளில் சாதிக்கவே விருப்பம்' என்று கூறியுள்ளார்.  

குல்தீப் யாதவ்

 மேலும், 'கடைசி ஆறு மாதங்கள் எனக்கு மிகவும் அற்புதமானவை. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆரம்ப கட்டத்தில், எனது நாட்டுக்காக அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் என்பதே விருப்பம். அதில் ஒருநாள், டி20 அல்லது டெஸ்ட் போட்டிகள் என்ற பாரபட்சம் இல்லை. ஆனால் நீண்ட கால நோக்கில், என் நாட்டுக்காக நான் நிறைய டெஸ்ட் போட்டிகளில் வெற்றியைத் தேடித் தர வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அதிக நேரம் பந்து வீசுவதுதான் இருப்பதிலேயே சவாலான விஷயம்' என்று கூறியுள்ளார்.

குல்தீப் யாதவ், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அவர், தொடர்ச்சியாக சிறந்த பந்துவீச்சின்மூலம் கவனம்பெற்று வருகிறார்.  'ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகள் எடுப்பது என்பது ஒரு கனவு போன்றது. அதை, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆரம்பத்திலேயே சாதிப்பேன் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை' என்றார் மகிழ்ச்சியுடன்.