'திரும்ப வருவேன்னு சொல்லு!' - மரியா ஷரபோவா பஞ்ச்

ஐந்து முறை க்ராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, ஊக்க மருந்து பயன்படுத்திய காரணத்தால், 15 மாதங்கள்  டென்னிஸ் விளையாடத் தடைசெய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம், அவர் சர்வதேச டென்னிஸ் அரங்கில் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். ஆனால் 15 மாத இடைவெளி, அவரது ஆட்டத்தை மிகவும் பாதித்தது. பல டென்னிஸ் ஓபன்களில், ஆரம்ப சுற்றுகளிலேயே வெளியேறியது உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அவரது டென்னிஸ் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று பலரால் ஆரூடம் கூறப்படும் நிலையில், 'நான் திரும்ப வருவேன்னு சொல்லு' என்று பஞ்ச் கொடுத்துள்ளார் ஷரபோவா.

மரியா ஷரபோவா

'உடலில் வலிமையும் ஆரோக்கியமும் இருக்கும் வரை, என் டென்னிஸ் வாழ்க்கை நீண்டுகொண்டே இருக்கும். டென்னிஸ் விளையாட்டின்மீது எனக்கு இருக்கும் காதலை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். ஒவ்வொரு முறை நான் அரங்குக்கு வரும்போதும், இன்னும் முன்னேறவும் வெற்றிபெறவுமே முயல்கிறேன். நான் மட்டுமில்லை, செரினா வில்லியம்ஸ்க்கும் இன்னும் நீண்ட டென்னிஸ் கரியர் இருக்கிறது. 15 மாத இடைவெளிக்குப் பிறகு, சர்வதேச அளவில் டென்னிஸில் விளையாடுவதற்கு சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால், அது சீக்கிரமே மாறும்' என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!