வெளியிடப்பட்ட நேரம்: 00:48 (20/10/2017)

கடைசி தொடர்பு:08:50 (20/10/2017)

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவைப் பந்தாடியது இந்திய அணி

பங்களாதேஷில், 10-வது ஆசிய ஹாக்கி போட்டி நடந்துவருகிறது. இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில், 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது, இந்திய அணி. 

ஹாக்கி

10-வது ஆசிய ஹாக்கி கோப்பைப் போட்டி முதல் போட்டியில் இந்தியா, ஜப்பானை எதிர்கொண்டு 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில், பங்களாதேஷை எதிர்கொண்டு 7-0 என்ற கோல் கணக்கில் மெகா வெற்றியைப் பதிவுசெய்தது. அக்டோபர் 15-ம் நாள் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், பரம எதிரியான பாகிஸ்தானை 3-1 என்ற கோல்கணக்கில் பந்தாடியது இந்தியா. இந்த மூன்று வெற்றியின்மூலம் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது இந்திய அணி. 

ஹாக்கி

நேற்று நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில், இந்திய அணி தென்கொரியா அணியுடன் மோதி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. இரண்டாவது சூப்பர் 4 போட்டியில், மலேசிய அணியுடன் மோதி இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருக்கிறது. மீண்டும் தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை சனிக்கிழமை சந்திக்கிறது இந்திய அணி. இறுதிப் போட்டி, அக்டோபர் 22-ம் தேதி நடக்க இருக்கிறது.