வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (20/10/2017)

கடைசி தொடர்பு:15:39 (20/10/2017)

சேவாக்குக்கு தலைகீழாக வாழ்த்து சொல்லிய சச்சின்!

இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது சக வீரர் சேவாக்கின் 39-வது பிறந்தநாளுக்கு, ‘தலைகீழாக’ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சேவாக்

இந்திய கிரிக்கெட்டின் அடையாளங்களுள் ஒருவர் சேவாக். சுமார் 13 ஆண்டுகாலம் இந்தியர்களின் மனம் கவர்ந்த கிரிக்கெட் விளையாட்டை நேசித்து விளையாடியவர். இந்திய அணிக்காக 23 டெஸ்ட் சதங்களும் 15 ஒருநாள் சதங்களும் அடித்தவர். தனது ஃபார்மின் உச்சகட்டத்தில் இருந்தபோது, எந்தப் பந்துவீச்சாளர்கள் எப்படிப் பந்துவீசினாலும் சொல்லிவைத்து அடிக்கும் கில்லி. 

இந்த கிரிக்கெட் கில்லி, இன்று தனது 39-வது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடிவருகிறார். நண்பர்கள், சக வீரர்கள், பிரபலங்கள் பலர் தொடர்ந்து இந்த ஜாம்பவானுக்கு வாழ்த்து தெரிவித்துவரும் வேளையில், ஒரு நாள் போட்டிகளில் தங்களது கூட்டணியால் மைதானத்தைத் தெறிக்கவிட்ட சச்சின் டெண்டுல்கர், ரொம்பவே வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் வீரு!  இந்தப் புதிய ஆண்டில், சிறப்பானதொரு துவக்கம் அமையட்டும். களத்தில் எப்போதும், நான் எது சொன்னாலும் அதைத் தலைகீழாகத்தான் செய்வாய். அதனால், இந்த முறை என்னிடமிருந்து ஒன்று!” என்று தலைகீழான எழுத்துருவில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.