வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (20/10/2017)

கடைசி தொடர்பு:15:20 (20/10/2017)

டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன்: காலிறுதியில் சாய்னா!

டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடரில், இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளுள் ஒருவரான சாய்னா நேவால், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சாய்னா

டென்மார்க் நாட்டின் ஒடென்சே நகரில், ‘டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், பெண்கள் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால், ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரணாய் ஆகியோர் சிறப்பாக விளையாடிவருகின்றனர். 

இதில், ஆண்கள் ஒற்றையரில் காலிறுதிக்காக நடந்த இன்றைய போட்டியில், இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மலேசிய வீரர் சாங் வெய் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரணாய், 21-17, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் மலேசிய வீரரை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

இதேபோல் பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் சாய்னா நேவால் தாய்லாந்தின் ஷிண்டா போலுவை வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதில் சாய்னா 22-20, 21-13 என்ற செட் கணக்கில் போட்டியை எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும் மற்றொரு வீரர் முசாந்த் கடாம்பி 21-13, 8-21, 21-18 என்ற செட் கணக்கில் கொரிய வீரர் ஜன் ஜன்னை வீழ்த்தினார்.