வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (21/10/2017)

கடைசி தொடர்பு:09:53 (21/10/2017)

பேட்ஸ்மேன்கள் தர வரிசை: பின்தங்கினார் விராட் கோலி!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில், இந்திய அணியின் கேப்டன் கோலி, ஒரு இடம் பின் தங்கி 2-ம் இடம் பிடித்துள்ளார்.

கோலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களுக்கான தர வரிசைப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்தத் தர வரிசைப் பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடர்ந்து முதலிடத்திலேயே நீடித்துவந்தார். ஆனால், தற்போது நடைபெற்ற வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியின்மூலம் தர வரிசைப் பட்டியலில் கோலியின் இடம் சரிந்துள்ளது.

வங்க தேச கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம்செய்து, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடிவருகிறது. இத்தொடரில், சமீபத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளில் டிவில்லியர்ஸ், வங்க தேச அணி பௌலர்களின் பந்துகளை மைதானத்தின் நாலா புறமும் சிதறடித்தார். இவரது அதிரடியான பேட்டிங் மூலம் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்து தற்போது முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.