வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (21/10/2017)

கடைசி தொடர்பு:17:05 (21/10/2017)

’சொந்த மண்ணில் இந்தியாதான் பலமான அணி’ - சொல்கிறார் நியூசிலாந்து கேப்டன்

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியா வந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. 

இந்நிலையில் இன்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன், “மும்பை வான்கடே மைதானத்தில் உலகக்கோப்பையின்போது இரண்டு ஆட்டங்கள் ஆடியிருக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக தற்போதுதான் முதல் முதலாக இந்த மைதானத்தில் களம் இறங்க உள்ளோம். 

எங்கள் அணியின் நடுவரிசை இன்னும் சிறப்பான ஆட்டத்தை இந்த முறை வெளிப்படுத்தும் என நம்புகிறேன். சொந்த மண்ணில் இந்தியா உலகிலேயே பலமான அணி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தும் கடந்த முறை சிறப்பாகவே செயல்பட்டோம். கடைசி போட்டியில் தான் தொடரை இழந்தோம். இந்தியாவுக்குச் சவால் அளிக்கத் தயாராக உள்ளோம். இந்த முறை இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். மும்பை மைதானம் சிறந்த ஆடுகளத்தைக் கொண்டது. தற்போதும் அதேபோன்று இருக்கும் என நம்புகிறேன் ” என்றார்.