வெளியிடப்பட்ட நேரம்: 00:29 (22/10/2017)

கடைசி தொடர்பு:00:29 (22/10/2017)

டென்மார்க் ஒப்பன் தொடர்; இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்

டென்மார்க் ஓப்பன் பேட்மின்டன் தொடரில், இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர், ஶ்ரீகாந்த் கிடாம்பி. இந்தத் தொடரின் காலிறுதிப் போட்டிகளில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவாலும், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் பிரணாயும் தோல்வியடைந்து, போட்டித் தொடரிலிருந்து வெளியேறினார்கள்.

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஹாங்காங்கின் வாங்கை சந்தித்தார். சமீபகாலமாக ஸ்ரீகாந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். உலகின் முன்னனி வீரர்களை வீழ்த்தி நம்பிக்கை அளித்து வருகிறார். அதேபோன்று இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். முதல் செட்டில், 21-18 என கைப்பற்றிய ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-17 என நேர் செட்களில் வெற்றி பெற்றார். 

இதன் மூலம் டென்மார்க் ஓப்பன் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார். நாளை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. அதில் கொரிய வீரர் லீ யுடன் மோதுகிறார். இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா, பி.வி சிந்து, ப்ரணாய் ஆகியோர் முந்திய சுற்றுகளில் தோல்வி அடைந்து வெளியேறினர்.