வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (22/10/2017)

கடைசி தொடர்பு:09:50 (23/10/2017)

IndvsNZ: இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பல்!

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பியுள்ளனர். 

ட்ரென்ட் போல்ட் 

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன் விராட் கோலி வென்றார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் முறையே 20 மற்றும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருவரையும், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் பெவிலியன் அனுப்பினார். தற்போது கேப்டன் விராட் கோலியும், கேதார் ஜாதவ்வும் களமிறங்கி அணியை சரிவில் இருந்து மீட்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 54/2 என்ற நிலையில் ஆடி வருகிறது.