200-வது போட்டியில் விராட் கோலி சதம்... நியூசிலாந்துக்கு இலக்கு 281! #IndvsNZ

இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து, இந்திய அணி, நியூசிலாந்துக்கு 281 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.

விராட் கோலி


இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன் விராட் கோலி வென்றார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் முறையே 20 மற்றும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் கேதார் ஜாதவ் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை ஆரம்பித்தனர். ஜாதவ்வும் 12 ரன்களுக்கு வெளியேற, இந்திய அணி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளிக்கத் திணறியது. பின்னர் இறங்கிய தினேஷ் கார்த்திக், கோலியுடன் சேர்ந்து பார்டனர்ஷிப் டெவலப் செய்தார். அவர் 37 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய கோலி, ஒருநாள் போட்டிகளில் தனது 31-வது சதத்தைக் கடந்தார். அவர்  125 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது கோலியின் 200-வது போட்டியும் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில், ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்க உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!