ஹாக்கி ஆசிய கோப்பை: இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

ஹாக்கி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இந்திய ஹாக்கி அணி

டாக்காவில் நடந்த இறுதிப் போட்டியில் பலம் பொருந்திய மலேசிய அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டது இந்திய ஹாக்கி அணி. இறுதிப் போட்டியின் முதல் பாதியில் இந்திய அணி இரண்டு கோல்களை அடித்தது. ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் ராமன்தீப் சிங்கும் 29-வது நிமிடத்தில் லலித் உபத்யாயும் தலா ஒரு கோல்களை அடித்தனர். இரண்டாம் பாதியின்போது, ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் மலேசியாவின் ஷாரில் சாபா அந்த அணியின் முதல் கோலை அடித்தார். பின்னர், இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்ய வேண்டுமென்று மலேசியா எவ்வளவோ முயன்றது. ஆனால், இந்திய அணியின் ஆபாரமான டிஃபன்ஸால் அது சாத்தியப்படவில்லை. இதையடுத்து, இறுதிப் போட்டியை 2-1 கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. ஆசிய கோப்பையில் 10 ஆண்டுகள் கழித்து இந்திய அணி, இப்போதுதான் சாம்பியன் ஆகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!