வெளியிடப்பட்ட நேரம்: 22:51 (22/10/2017)

கடைசி தொடர்பு:10:09 (23/10/2017)

டென்மார்க் ஒப்பனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த்!

டென்மார்க் ஒப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் ஸ்ரீகாந்த். 

டென்மார்க் ஒப்பன் தொடர், கடந்த சில நாள்களாக நடந்துவந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர், முந்தைய சுற்றுகளில் தோல்வியடைந்து வெளியேறினர். ஆனால் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து நம்பிக்கை அளித்துவந்தார். 

சமீபகாலமாக, ஸ்ரீகாந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் முன்னணி வீரர்களை வீழ்த்தி நம்பிக்கை அளித்துவந்தார். இந்தத் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்று, டென்மார்க் ஒப்பன் தொடரின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. 
துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஸ்ரீகாந்த், இறுதிவரை கொரிய வீரர் லீ-க்கு வாய்ப்பு அளிக்காமல் விளையாடினார். முதல் செட்டை 21-10 என கைப்பற்றிய ஸ்ரீகாந்த், இரண்டாம் சுற்றில் இன்னும் அதிரடியாக விளையாடி 21-5 என வெற்றிபெற்றார். இது, இந்த ஆண்டு அவர் வெல்லும் மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.