Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

70 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூஸிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 65 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடவுள்ளது. முதல்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் புனே மைதானத்தில் இன்று மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்கியது. பகல் - இரவு ஆட்டமான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆனால், நியூஸிலாந்து அணி வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. மார்டின் குப்டில் 11 ரன்களிலும், கோலின் முன்ரோ 10 ரன்களிலும் வில்லியம்சன் 3 ரன்களிலும் டெய்லர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நியூஸிலாந்து 20 ஓவரில் 76 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்துவருகிறது. இந்திய அணி சார்பில் புவனேஸ்குமார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement