வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (25/10/2017)

கடைசி தொடர்பு:08:45 (26/10/2017)

இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு!

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில்  விளையாடவுள்ளது. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் புனே மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்குத் தொடங்கியது. பகல் - இரவு ஆட்டமான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வுசெய்து களமிறங்கியவுடன் முதல் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான லாதம், நிக்கோல்ஸ், க்ராந்தோம் ஆகியோர் முறையே 38, 42 மற்றும் 41 ரன்கள் எடுத்தனர். இதனால், நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில், 230 ரன்கள் எடுத்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி, வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டியில் வென்றால்தான் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளது இந்தியா.