வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (25/10/2017)

கடைசி தொடர்பு:08:03 (26/10/2017)

22 கோல்கள் அடித்து அமெரிக்க அணியைப் பந்தாடிய இந்திய ஜூனியர் ஹாக்கி அணி!

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பைக்கான ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் அமெரிக்க அணியை 22-0 என்ற கணக்கில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது. 

Photo Credit: Hockey India


சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கிப் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகின்றன. அந்தத் தொடரின் லீக் போட்டி ஒன்றில் அமெரிக்க அணியை இந்திய ஜூனியர் ஹாக்கி அணி சந்தித்தது. போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 22 கோல்களை அடித்து அசத்தல் வெற்றிபெற்றது. முழுக்க முழுக்க இந்திய அணியின் கை ஓங்கியிருந்த அந்தப் போட்டியில், பதிலுக்கு அமெரிக்க அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்திய அணி தரப்பில் விஷால் அண்டில், தில்ப்ரீத் சிங், ஹர்மன்ஜித் சிங் மற்றும் அபிஷேக் என 4 பேர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினர். அதிலும் குறிப்பாக ஹர்மன்ஜித் சிங், 5 கோல்கள் அடித்து அசத்தினார். தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த இந்திய அணி, இந்த வெற்றி மூலம் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது. முதல் போட்டியில் ஜப்பானை 3-2 என்ற கணக்கிலும், இரண்டாவது போட்டியில் மலேசியாவை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தியிருந்தது. இந்திய அணி, தனது அடுத்த லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வரும் வியாழக்கிழமையும், கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை வரும் சனிக்கிழமையும் சந்திக்கிறது.