வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (29/10/2017)

கடைசி தொடர்பு:09:51 (30/10/2017)

வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்!

வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீசத் தயாராகியுள்ளது. இந்திய அணி பேட்டிங் செய்வதாகக் களம் இறங்கியுள்ளது.

india

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில்  விளையாடவுள்ளது. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, இன்று கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இன்றைய இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வுசெய்ய இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. இந்தப் போட்டியை வெல்வதன் மூலம் நியூசிலாந்து இந்திய மண்ணில் ஒரு தொடரைக் கைப்பற்றி அசத்திய சாதனையைப் பதிவு செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஆறு ஒரு நாள் தொடர்களை வசப்படுத்தியுள்ள இந்திய அணி இந்தத் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கியுள்ளது.