வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (01/11/2017)

கடைசி தொடர்பு:19:09 (01/11/2017)

நெஹ்ரா ஃபேர்வெல் டி20 போட்டி..! பந்துவீச்சைத் தேர்வுசெய்த நியூசிலாந்து

இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ்வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

Photo Credit: BCCI

 

சர்வதேச டி20 போட்டியில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை முதல்முறையாக வெல்லும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய 5 டி20 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ராவின் ஃபேர்வெல் போட்டியாகும். இந்தப் போட்டிக்குப் பின்ன,ர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நெஹ்ரா ஏற்கெனவே அறிவித்திருந்தார். போட்டிக்கு முன்பாக நெஹ்ராவைக் கவுரவிக்கும் வகையில் டிராபி ஒன்றை இந்திய அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கேப்டன்களான தோனி, விராட் கோலி வழங்கினர். மேலும், இந்தப் போட்டி மூலம் இந்திய அணி தரப்பில் ஷ்ரேயாஸ் ஐயர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிறார்.