வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (04/11/2017)

கடைசி தொடர்பு:10:00 (04/11/2017)

சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கிய சச்சின்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாலையில் காரில் சென்ற சச்சின் டெண்டுல்கர் திடீரென்று காரில் இருந்தபடியே இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து செல்லவலியுறுத்தினார். 


இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நேற்றுமுன்தினம் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்துப் பேசினார். அவரைச் சந்தித்து, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துபோட்டியின் 4-வது சீசனின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். அவரைச் சந்தித்துவிட்டு காரில் சென்றுகொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர், திடீரென்று காரின் கண்ணாடியை இறக்கி, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அதனால், சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இரு சக்கர வாகனத்தில் இருந்த பெண், சச்சின் சொல்வதைக் கேளாமல், அவரையை பிரம்மிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.