வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (08/11/2017)

கடைசி தொடர்பு:19:41 (08/11/2017)

’அவர்கள்தான் பாராட்டுக்குரியவர்கள்!’ - கோலி யாரைப் புகழ்கிறார் தெரியுமா?

இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி  நியூஸிலாந்தை வீழ்த்தி, 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற, அணியின் பௌலர்கள் பெரும் பங்காற்றினர். இந்நிலையில், அவர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 

விராட் கோலி

கோலி, `கிரிக்கெட் போட்டிகள் சுருங்கச் சுருங்க, அது ஒரு பேட்ஸ்மேனின் போட்டியாகத்தான் மாறுகிறது. ஆனால், பௌலர்கள் ஒரு போட்டியை முடிவுசெய்யும் தருணத்துக்கு வரும்போது, அது மிகப் பெரிய மாற்றங்களைச் செய்துவிடுகிறது. மூன்றாவது டி20 போட்டியில் இரண்டு அணிகளும் இலக்கின் பக்கத்தில் வந்தோம். ஆனால், எந்த அணி நன்றாகப் பந்துவீசியதோ, அந்த அணியே வெற்றிபெற முடிந்தது. எங்கள் அணி பௌலர்கள், கடினமான நேரங்களிலும் அவர்களின் திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர். எதிரணியினருடன் அந்தத் திறமை அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இத்திறமையை அவர்கள் தொடர்ந்து வெளிக்காட்டி வருகின்றனர். இதனால், நாங்கள் ஒரு அணியாக மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதேபோல, ஒரு பௌலிங் குழுவாக எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு, அவர்களுக்குக் கொடுக்கப்படுவதைவிட அதிக பாராட்டுகள் கொடுக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.