தோனி குறித்து மனம் திறந்த விராட் கோலி..!

`தோனி, டி20 கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்குத் தகுதியானவர்தானா...' என்பது குறித்து விவாதங்கள் நடந்துவரும் நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி, இந்த விஷயம்குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். 

கோலி மற்றும் தோனி


கோலி, `எதற்கு தோனியை மட்டும் 20 ஓவர் கிரிக்கெட் விஷயத்தில் டார்கெட் செய்கின்றனர் என்று எனக்குப் புரியவில்லை. தோனி, உடற்தகுதியுடன் இருக்கிறார். அவரால் முடிந்த அனைத்து விதத்திலும் அணிக்காகச் செயல்படுகிறார். களத்தில் திட்டங்கள் வகுப்பதிலும் சரி, பேட்டிங் ஆடுவதிலும் சரி, அவர் சிறப்பாகவே செயல்பட்டுவருகிறார். இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடந்த தொடர்களில், அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால், இந்தத் தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர், எந்த இடத்தில் பேட்டிங் ஆட வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரை இன்னும் பொறுமையோடு அணுக வேண்டும். அவர், பல கிரிக்கெட் வீரர்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளக்கூடியவர். அவர், புத்திக் கூர்மையானவர். உடல்குறித்தும் விளையாட்டுகுறித்தும் நல்ல புரிதல் இருக்கிறது. அவர் எப்போது ஓய்வுபெற வேண்டுமென்று யாரும் முடிவுசெய்ய முடியாது. அவருக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது' என்று உணர்வுபூர்வமாகக் கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!