வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (09/11/2017)

கடைசி தொடர்பு:08:19 (10/11/2017)

வீசப்பட்டதோ 96 பந்துகள்! வருமானமோ ரூ.6.88 கோடி!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியை நடத்திய கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.6.88 கோடி வருமானம் கிடைத்துள்ளது.


இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மழையால் இந்தப் போட்டி பாதிக்கப்பட்டாலும், கேரள கிரிக்கெட் வாரியத்துக்கு பணமழையை அள்ளிக்கொடுத்திருக்கிறது இந்தப் போட்டி.

இரு அணிக்கும் சேர்த்து மொத்தம் 96 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட இந்தப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 
குறைந்த நேரமே போட்டி நடந்தாலும் வருமானம் கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு அதிகம்தான். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் ரூ.2.91 கோடியும், மைதானத்தின் உள்ளே விளம்பரம் வைப்பதன் மூலம் ரூ.1.90 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது. மைதானத்துக்கு வெளியே விளம்பரம் வைக்க அனுமதித்தன் மூலம் ரூ.30 லட்சம் வந்துள்ளது. வங்கி மற்றும் மருத்துவ பார்ட்னர்ஷிப் மூலம் ரூ.27 லட்சம் கிடைத்துள்ளது. போட்டியை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கும் பங்குத்தொகை மூலம் ரூ.1.5 கோடி வந்துள்ளது. ஆக மொத்தம் ரூ.6.88 கோடியை கல்லா கட்டியுள்ளது கேரள கிரிக்கெட் சங்கம். 55,000 பேர் நேரடியாக இந்தப் போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.