வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (10/11/2017)

கடைசி தொடர்பு:18:37 (10/11/2017)

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரெஸ்ட்! இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி, 3 டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இந்தp போட்டிக்கு முன், சஞ்சு சாம்ஸன் தலைமையிலான போர்டு பிரசிடெண்ட் லெவன் அணியுடன் இலங்கை அணி பயிற்சிப் போட்டியில் விளையாடுகிறது. 

இந்த நிலையில், இலங்கை அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட 16 பேர்கொண்ட அணியில் அவர் இடம்பெற்றிருந்தாலும், அதிகp போட்டிகளில் பங்கேற்றிருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், முரளி விஜய், ஷிகர் தவான், சட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (துணைக் கேப்டன்), ரோகித் ஷர்மா, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா.