'இலங்கைத் தொடரில் இந்திய அணியின் இலக்கு இதுதான்': ரஹானே பளீச்

இலங்கைச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்துத் தொடர்களிலும் வென்று வொயிட் வாஷ் வெற்றியுடன் திரும்பியது.

Photo Credit: BCCI

 

இந்த நிலையில், இலங்கை அணி தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் வெற்றியைக்கூட பதிவு செய்யவில்லை என்பதால், தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி அந்த முனைப்புடன் டெஸ்ட் தொடரை எதிர்நோக்குகிறது. 

போட்டிக்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானே, ‘இலங்கையில் சென்று விளையாடிய தொடரைவிட இந்தத் தொடர் முற்றிலும் வேறுபட்டது. இலங்கை அணியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஒவ்வொரு தொடரும் முக்கியமானது. தற்போதைய சூழலில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வதே முக்கியமானது. ஒவ்வொரு தொடரையும் வெல்வதே எங்களின் முக்கிய நோக்கமாகும். தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து இப்போது சிந்திக்கவில்லை. ஒரு அணியாக எங்கள் கவனம், இந்தத் தொடர்மீது மட்டுமே இப்போது இருக்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தின் தன்மை நன்கு பரிச்சயம் என்பதால், முதல் டெஸ்ட் போட்டியை வெல்வது குறித்து மட்டுமே இப்போது சிந்தித்து வருகிறோம்’ என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!