’உங்கள் வரலாறைத் திரும்பிப் பாருங்கள்’ - தோனியை விமர்சிப்பவர்களுக்கு ரவிசாஸ்திரி பதிலடி!

தோனியை விமர்சிப்பவர்கள், அதற்கு முன் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு முறை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டமாகக் கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரி


சமீபத்தில் நடந்த இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் தொடரில் தோனியின் செயல்பாடு விமர்சனத்துக்குள்ளானது. முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ். லட்சுமணன், அகார்கர் ஆகியோர், “தோனி டி20 போட்டிகளில் இளைஞர்களுக்கு வழிவிட்டு விலக இதுவே சரியான தருணம் என்று கருத்துக் கூறியிருந்தனர். இதுதொடர்பாக தொடர் விவாதங்கள் எழுந்த நிலையில், முன்னாள் வீரர்கள் ஷேவாக், கபில்தேவ் போன்றவர்கள் தோனிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்தனர். 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தோனிக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ரவி சாஸ்திரி, ‘தோனியை விமர்சிப்பவர்கள் தங்களுடைய முந்தைய காலம்குறித்து ஒருமுறை எண்ணிப்பார்க்க வேண்டும். தோனி இன்னும் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடுவார். அவருக்கு ஆதரவாகப் பின்னால் நிற்பதே இந்திய அணியின் கடமை. ஒரு வீரராகவும், விக்கெட் கீப்பராகவும், களத்தில் கூர்மையான மனதோடு செயல்படுவதிலும் தோனியை மிஞ்ச யாரும் இல்லை’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!